உத்தரப் பிரதேசத்தில் 49,568 புதிய தலைமைக் காவலர்கள் தேர்வு

உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த 49,568 புதிய தலைமைக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  
உத்தரப் பிரதேசத்தில் 49,568 புதிய தலைமைக் காவலர்கள் தேர்வு

லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த 49,568 புதிய தலைமைக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சிவில் மற்றும் ஆயுதம் தாங்கிய தலைமைக் காவலர் ஆகிய துறையில் தலைமைக் காவலர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் இறுதி பட்டியலை உத்தரப் பிரதேச காவலர் ஆட்சேர்ப்பு மற்றும் ஊக்குவிப்பு வாரியம் (யுபிபிஆர்பிபி) வெளியிட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் UPPRPB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த தகுதிப் பட்டியல் உள்பட மொத்தம் 49,568 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பதிவு எண் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குல்ஷன் குமார் முதலிடத்தையும், யோகேஷ் யாதவ் இரண்டாம் இடத்தையும், ராம் நிவாஸ் யாதவ் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

கடந்த 2018 அக்டோபர் மாதத்தில் தலைமைக் காவலர் பதவிக்கான காலியிடங்களை  (யுபிபிஆர்பிபி) அறிவித்திருந்தது. மொத்த காலியிடங்களில் 31,360 தலைமைக் காவலர் பதவிக்கும், 18,208 ஆயுதம் தாங்கிய தலைமைக் காவலர் பதவிக்கும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜனவரி 2019-ல் நடத்தப்பட்டது. பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான ஆவண சரிபார்ப்பு மற்றும் இயற்பியல் தரச் சோதனை நடத்தப்பட்டன. மேலும், கடந்த மாதம் இறுதிக்கட்ட தேர்வான உடல் தேர்வு சோதனை நடத்தப்பட்டது. 

அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றவர்கள் பெயர்கள் தகுதி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தலைமைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com