தெலங்கானா சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழிசை சொன்ன திருக்குறள்

தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்றுத் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை திருக்குறள் ஒன்றைச் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.
தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்றுத் தொடங்கியது. ஆளுநர் தமிழிசை திருக்குறள் ஒன்றைச் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.

தெலங்கானா சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது ஆளுநர் தமிழிசை தனது உரையை உறு பசியும் என்று தொடங்கும் திருக்குறளைச் சொல்லி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கமும் அளித்தார்.

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை, அந்த மாநிலத்தின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அவைத் தலைவர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வணக்கம் என தமிழில் உரையைத் தொடங்கிய தமிழிசை, தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாற்றினார். இடையே, 

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு 


என்ற திருக்குறளைச் சொல்லி, அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தார். அதாவது, ஒரு நாடு என்பது மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வரும் பகை ஆகியவை இல்லாமல் இருப்பது என்பதே அந்த திருக்குறளுக்கான பொருளாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com