கரோனா வைரஸ் குறித்து அச்சமில்லை: ஷகீன்பாக் போராட்டக்காரர்கள்

போராட்டக் களத்தில் இருந்து எங்களை வெளியேற்ற மத்திய அரசு கரோனா வைரஸ் குறித்த அச்சத்தை உண்டாக்குவதாக தில்லி ஷகீன்பாக்கில் சிஏஏ-வுக்கு எதிராக போராடும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


போராட்டக் களத்தில் இருந்து எங்களை வெளியேற்ற மத்திய அரசு கரோனா வைரஸ் குறித்த அச்சத்தை உண்டாக்குவதாக தில்லி ஷகீன்பாக்கில் சிஏஏ-வுக்கு எதிராக போராடும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தில்லி ஷகீன்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து 90 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தலும் பரவி வருகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மக்கள் அதிகளவில் கூடும் நிகழ்ச்சிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

இதைக் காரணம் காட்டி தில்லி ஷகீன்பாக்கில் சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக ஷகீன்பாக் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் கூறுகையில்,

"நாங்கள் சானிடைஸர்களைப் (sanitizers) பயன்படுத்துகிறோம். பெண்கள் கைகளைக் கழுவ டெட்டால் (Dettol) வழங்கப்படுகிறது. கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பெண்கள் போராட்டக் களத்தில் இருந்து கலைந்து செல்வார்கள் என அரசு நினைக்கிறது. அமித் ஷா மற்றும் மோடி, எங்களைக் குறித்து கவலை கொள்ள வேண்டாம். எங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

மழையையும், நடுங்கும் குளிரையும் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. தற்போது கரோனா குறித்தும் அச்சமில்லை.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் அறிகுறி குறித்த விழிப்புணர்வு மற்றும் போராட்டக்காரர்களுக்கு அது பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றார். மேலும் போராட்டக் களத்துக்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com