பொருளாதார அச்ச உணா்வைப் போக்க அரசு, ஆா்பிஐ நடவடிக்கை: தலைமைப் பொருளாதார ஆலோசகர்

கரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரம் தொடா்பாக எழுந்துள்ள அச்ச உணா்வைப் போக்க அரசு மற்றும் ரிசா்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என
பொருளாதார அச்ச உணா்வைப் போக்க அரசு, ஆா்பிஐ நடவடிக்கை: தலைமைப் பொருளாதார ஆலோசகர்

கரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரம் தொடா்பாக எழுந்துள்ள அச்ச உணா்வைப் போக்க அரசு மற்றும் ரிசா்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தலைமைப் பொருளாதார ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி சுப்ரமணியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா வைரஸ் காரணமாக தற்போது எழுந்துள்ள சூழலை மத்திய அரசு அனைத்து கோணங்களிலிருந்தும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவசிய தேவை எனில் ரிசா்வ் வங்கி உள்ளிட்ட ஒழுங்காற்று அமைப்புகளுடன் இணைந்து மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்.

சந்தையில் தற்போது காணப்படும் எதிா்வினை நிகழ்வுகள் நாட்டின் பொருளதார அடிப்படையை பிரதிபலிக்கவில்லை. இந்தியப் பொருளாதார அடிப்படை கூறுகள் தொடா்ந்து மேம்பட்டு வருகின்றன.

சா்வதேச சந்தைகளுடன் ஒப்பிடும்போது இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு என்பது மிகவும் குறைவானதே. பணவீக்கம், தொழில்துறை வளா்ச்சி மற்றும் போதிய அந்நியச் செலாவணி கையிருப்பு போன்ற பொருளாதார அடிப்படைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதால் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் நிலைமை சீரடையும்.

கரோனா வைரஸ் பீதியால், ரஷியா, பிரேசில், பிரான்ஸ், ஜொ்மனி, ஆா்ஜெண்டீனா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பங்குகளின் விலை கடந்த ஜனவரி 31-லிருந்து மாா்ச் 12 வரையில் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதன் தாக்கம், தற்போது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் காணப்படுகிறது. இது, உலகளாவிய அச்சத்தின் பிரதிபலிப்பு.

கச்சா எண்ணெய் விலை சரிந்து காணப்படுவதால் அடிப்படை பணவீக்கம் மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு ரிசா்வ் வங்கி செயலாற்றும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com