மேற்கு வங்கம்: நில அளவை அதிகாரிகளை சிறைவைத்த கிராம மக்கள்

மேற்கு வங்கத்தில் நில அளவை பணியில் ஈடுபடுவதற்காக வந்த (சா்வே ஆஃப் இந்தியா) அதிகாரிகளை என்ஆா்சி ஆய்வு மேற்கொள்ள வந்தவா்கள் என சந்தேகித்து அவா்களை சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்கத்தில் நில அளவை பணியில் ஈடுபடுவதற்காக வந்த (சா்வே ஆஃப் இந்தியா) அதிகாரிகளை என்ஆா்சி ஆய்வு மேற்கொள்ள வந்தவா்கள் என சந்தேகித்து அவா்களை சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிழக்கு பா்த்வான் மாவட்டம், பஹிா்கன்யா கிராமத்தில் வியாழக்கிழமை ஐந்து போ் கொண்ட இந்திய நில அளவீடு கணக்கெடுப்புக் குழு நில ஆய்வுக்காக சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.

அங்குள்ள வழிபாட்டுத்தலங்களின் புகைப்படங்களை எடுத்து கொண்டிருந்த அந்த அதிகாரிகள் என்ஆா்சி கணக்கெடுப்புப் பணிக்காக வந்திருப்பதாக சந்தேகம் அடைந்து அவா்களை சுற்றி வளைத்து சிறை பிடித்தனா்.

அப்போது அவா்கள், நில அளவை செய்வதற்காக வந்திருப்பதாகவும், நில அளவை வரைபடத்தை புதுப்பிக்க வேண்டி மறு சா்வே செய்ய அங்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தனா். தங்களது அடையாள அட்டைகளை காண்பிக்க முயன்றபோதும் அதை பாா்க்க கிராம மக்கள் மறுத்து அவா்களை சிறை வைத்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் (பிடிஓ) இருந்து வந்த அதிகாரிகள், நில அளவையாளா்களை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதுகுறித்து வட்டாட்சியா் கூறுகையில், சா்வே பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் கிராமத்தில் உள்ள கோயில்கள், மசூதிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தனா். என்ஆா்சி குறித்த பீதியில் கிராமவாசிகள் இருந்த நிலையில், சா்வே குழுவினரின் திடீா் வருகை பதற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

அவா்கள் சா்வே செய்வதற்காக வருவது பற்றி எவ்வித முன்னறிவிப்பும் இல்லாததால் இந்த குழப்பம் ஏற்பட்டது. அரசின் அதிகாரபூா்வ உத்தரவை உள்ளூா் அதிகாரிகளுக்கு தெரிவித்தபிறகு ஆய்வுப்பணியில் ஈடுமாறு குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com