கரோனா பாதித்த நால்வரில் மூவரை குணப்படுத்திய ஜெய்ப்பூர் மருத்துவர்கள்

கரோனா பாதித்த நால்வரில் மூவரை குணப்படுத்திய ஜெய்ப்பூர் மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கரோனா பாதித்த நால்வரில் மூவரை குணப்படுத்திய ஜெய்ப்பூர் மருத்துவர்கள்


ஜெய்ப்பூர்: கரோனா பாதித்த நால்வரில் மூவரை குணப்படுத்திய ஜெய்ப்பூர் மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரோனா பாதித்த நான்கு பேருக்கும், பன்றிக் காய்ச்சல், மலேரியா மற்றும் எச்ஐவி பாதித்தவர்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை ஒன்றிணைத்து கொடுத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகப்பெரிய மருத்துவமனையாகக் கருதப்படும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மருத்துவமனையில் கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த நான்கு பேரில் மூன்று பேர் குணமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், கரோனா குணமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

துபையில் இருந்து திரும்பிய ஜெய்ப்பூர் நபருக்கு தற்போது கரோனா பாதிப்பு இல்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெஹ்லட், கரோனாவைக் குணப்படுத்திய மருத்துவர்களுக்கு டிவிட்டர் பக்கம் மூலமாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

நான்கு பேரில் மூன்று பேர் குணமடைந்த நிலையில், ஸ்பெயினில் இருந்து திரும்பிய ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com