எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது முதல் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தீவிரமடைந்துள்ளது. 

இந்தநிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோடே மற்றும் மெந்தார் பகுதிகளில் இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். சிறியரக ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள் ஆகியவை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. எனினும் இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 

இதன் காரணமாக எல்லைப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com