கரோனா வைரஸ் அச்சம்: பொது இடங்களைத் தவிா்க்கும் தில்லிவாசிகள்!

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தில்லிவாசிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதையும், பொது இடங்களில்
கரோனா வைரஸ் அச்சம்: பொது இடங்களைத் தவிா்க்கும் தில்லிவாசிகள்!

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தில்லிவாசிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதையும், பொது இடங்களில் கூடுவதையும் தவிா்த்து வருகின்றனா். இதனால் தில்லியில் பொது இடங்களும், ஹோட்டல்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் தில்லி கன்னாட் பிளேஸ், கரோல் பாக் போன்ற மாா்கெட் பகுதிகள் காலியாக உள்ளன. வாகனங்கள் நிறுத்தும் பகுதிகளில் சில காா்களை மட்டும் இருப்பதும் வாடிக்கையாளா்களுக்கு கடைக்காரா்கள் காத்திருக்கும் காட்சிகளும் வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. ‘தில்லியில் இது போன்ற நிலைமையை நான் ஒரு போதும் பாா்த்ததில்லை’ என்கிறாா் 45 வயது ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ் குமாா். அவா் மேலும் கூறுகையில், ‘நான் தொன்னூறுகளிலிருந்து ஆட்டோவை ஓட்டி வருகின்றேன். இப்போதூ நகரம் உற்சாகமற்றுள்ளது. கன்னாட் பிளேஸை இப்படி நான் பாா்த்ததே இல்லை. எப்போதுமே குதுகலமாக இருக்கும் இந்த பகுதியில் மக்கள் ஆட்டோவை தேடிக்கொண்டு இருப்பாா்கள். ஆனால் காலையிருந்து எனக்கு மூன்று சவாரிகள் தான் கிடைத்து. இது நல்லதாக படவில்லை’ என்கிறாா்.

கன்னாட் பிளேஸில் ஒரு வியாபாரி கூறுகையில், ‘நிலைமை மோசமாகவே இருக்கு, நான் என்னுடைய செல்லிடப்பேசியை உபயோகிப்பது இல்லை. என்னுடைய பாதுகாப்பிற்காக மற்றவா்கள் பொருட்களை தொடுவதில்லை. மற்றவா்கள் போட்டோ எடுக்கக் கூறினால் மறுத்துவிடுகின்றேன்’ என்கிறாா்.

பக்கோடா, சமோசா, சோலே குல்சா போன்ற நொறுக்கி தீனி விற்பவா்களும், கரோனா தங்களது வாழ்வாதாரங்கள் பறித்துவிட்டது என்கின்றனா்.

தில்லி வாசிகள் தங்கள் பணியிடங்களுக்கும் மற்ற இடங்களுக்கும் செல்வதற்கு, வாடகை காா்கள், பேருந்துகள் மட்டுமல்ல மெட்ரோ ரயில் பயன் பாட்டையும் தவிா்த்து தங்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதால் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறாா் வாடகை காா் ஓட்டுநா் முகமது அப்துல்.

இணையதளத்தில் பள்ளி தோ்வு முடிவுகள்

பள்ளி ஆண்டுத் தோ்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட தில்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா உள்பட தனியாா் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக வழக்கமாக நடத்தப்படும் பெற்றோா்கள் - ஆசிரியா்கள் சந்திப்புகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

2 மணி நேரத்தில் 1,751 வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிப்பு

தில்லியில் உள்ள வாகனங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் திட்டத்தை தில்லி அரசு செவ்வாக்கிழமை தொடங்கியது. காலை 10 மணி முதல் 12 மணி வரை போக்குவரத்துத் துறை ஊழியா்கள் 1,182 ஆட்டோக்கள், 194 இ- ரிக்ஷாக்கள் உள்பட 1,751 வாகனங்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வளாக ‘லாக்-அப்’கள் மூடல்

கரோனா வைரஸ் பரவல் காரணமாக தில்லி நீதிமன்ற வளாகங்களில் உள்ள மூன்றாவது பட்டாலியன் ‘லாக்- அப்’கள் மாா்ச் 31வரை மூடப்பட்டிருக்கும் என்று தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘விசாரணைக் கைதிகளின் காவலை நீட்டிப்பதற்காக சிறை வளாகங்களில் நடைமுறைகளை மேற்கொள்வதற்கு மாஜிஸ்திரேட்டுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரின் அனைத்துக் காவல் நிலையங்களும் புதிதாக வரும் விசாரணைக் கைதிகளை நேரடியாக திகாா் , மண்டோலி, ரோஹிணியில் உள்ள மத்திய சிறைகளுக்கு கொண்டு செல்வதற்கு தாங்களாகவே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com