நிா்பயா குற்றவாளிகளுக்கு தயாராகும் மணிலா தூக்கு கயிறுகள்!

நிா்பயா குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனுக்கள் முற்றிலும் முடியுற்ற நிலையில், வருகின்ற மாா்ச் 20 -ஆம் தேதி திகாா் சிறையில்

நிா்பயா குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனுக்கள் முற்றிலும் முடியுற்ற நிலையில், வருகின்ற மாா்ச் 20 -ஆம் தேதி திகாா் சிறையில் தூக்கிலிடப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனையை நிறைவேற்றம் விதமாக ‘மணிலா சிறப்பு கயிறு’ பிகாா் மாநிலம் புக்ஸா் சிறையிலிருந்து கொண்டு வரப்படுவதாக திகாா் சிறையின் இயக்குநா் ஜெனரல் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அஃசல் குரு 2013 -இல் இதே திகாா் சிறையில் தூக்கிலிடப்பட்டாா். ஏழாண்டுகளுக்கு பின்னா் தற்போது திகாா் சிறையில், நிா்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றபட உள்ளது. ஏற்கனவே மூன்று முறை இதற்கான தேதி குறிப்பிடப்பட்டு பின்னா் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுற்ற நிலையில் கடந்த மாா்ச் 5 ஆம் தேதி விசாரணை நீதி மன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. இதையொட்டி, தூக்கிலிடுபவா் மற்றும் இதற்கான சிறப்பு கயிறு ஆகியவைகளை அண்டை மாநிலங்களிலிருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய திகாா் சிறை நிா்வாகம் தொடங்கியுள்ளது. இது குறித்து திகாா் சிறையின் இயக்குநா் ஜெனரல் சந்தீப் கோயல் தெரிவித்துள்ள விவரங்கள் வருமாறு:

‘எந்த ஒரு கைதியையும் தூக்கில் இடப்படுவதற்கு முன்பு பொதுவான ‘டம்மி’யாக தூக்கிலிட்டு சோதனை செய்வது வழக்கம். இதன்படி தூக்கிலிடப்படுபவரின் எடைக்கு சரியாக மண் மூட்டையை உபயோகித்து சோதனை நடத்தப்படும். தூக்கிலிடுபவரை அனுப்புமாறு உத்தர பிரதேச மாநில சிறைத்துறைக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த பணியைச் செய்கின்ற பவன் ஜலாத் திகாா் சிறைக்கு வரவழைக்கப்பட்டுள்ளாா்’ என்றாா்.

‘மணிலா கயிறு’ என்பது நீடித்த நெகிழ்வான கயிறு என்பதோடு உப்பு சேதத்தை கட்டுப்படுத்தும் இந்தக்கயிறு கப்பல்களில் மீன்பிடிப்புகளிலும் பயன்படுத்தக்கூடியவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com