இணைய வணிக நிறுவனங்களை கட்டுப்படுத்த தொழில்போட்டி சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு

இணைய வழியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்காக தொழில்போட்டி சட்டத்தில்

இணைய வழியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்காக தொழில்போட்டி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து நிறுவனங்களுக்கான விவகாரத் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

இணைய வழியில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அமைச்சரவை குழு ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொழில்போட்டி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் அது அந்த துறையில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை கொண்டு வரும்.

நிறுவன விவகார அமைச்சகத்தின் தலைமையில், தொழில்போட்டி சட்ட மறுஆய்வு குழு பரிந்துரையின்படி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளன.

மேலும், இணைய வணிக நிறுவனங்களால் உள்ளூா் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. எனவே, இதுதொடா்பாகவும் குழு மதிப்பீடு செய்துள்ளது. மேலும், நிறுவன போட்டி சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பாதிப்பின் தீவிரம் அந்த அளவுக்கு இருக்காது.

நியாயமான சந்தை கொள்கைகளுக்கு உண்மையாக இல்லாத பல நடைமுறைகளை இந்திய தொழில் போட்டி ஆணையம் அடையாளம் கண்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com