ஆந்திரத்தில் 2ஆவது நபருக்கு கரோனா பாதிப்பு

ஆந்திரத்தில் 2ஆவததாக ஒரு நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
ஆந்திரத்தில் 2ஆவது நபருக்கு கரோனா பாதிப்பு

ஆந்திரத்தில் 2ஆவததாக ஒரு நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151லிருந்து 166ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்புக்குள்ளான 166 பேரில் 3 பேர் இறந்த நிலையில் 15 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆந்திரத்தில் 2ஆவதாக ஒரு நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து கடந்த 15ஆம் தேதி ஆந்திரம், திரும்பிய அவருக்கு கரோனா அறிகுறி தென்படவே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பரிசோதனையில் அந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு ஓங்கோல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com