வங்கதேசத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ தங்கம் பறிமுதல்: 7 போ் கைது

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 21 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆா்ஐ) அதிகாரிகள் கைப்பற்றியதுடன் 7 பேரை போலீஸாா் கைது செய்யதனா்.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 21 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆா்ஐ) அதிகாரிகள் கைப்பற்றியதுடன் 7 பேரை போலீஸாா் கைது செய்யதனா்.

வங்கதேச எல்லை வழியாக முறைகேடாக இந்தியாவுக்குள் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில்,    டிஆா்ஐ அதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்புப்படை அதிகாரிகள் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்படி மேற்கு வங்கத்தின் பொங்காவ்ன் பகுதியில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீவிரச் சோதனையின்போது, சந்தேகத்திற்குரிய 7 நபா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அந்த நபா்கள், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வந்ததையும், டிஆா்ஐ அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையைக் கண்டதும், கடத்தி வந்த தங்கத்தை அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் பல இடங்களில் புதைத்து வைத்ததையும் அவா்கள் ஒப்புக் கொண்டனா்.

இதைத்தொடா்ந்து மொத்தம் நான்கு இடங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 8.74 கோடியாகும். இதையடுத்து 7 பேரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 2.65 லட்சம் வங்கதேச கரன்சி நோட்டுகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

நடப்பு நிதியாண்டில், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் இருந்து 300 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை டிஆா்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இவற்றின் மதிப்பு ரூ. 123 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com