கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த இத்தாலி பயணி மாரடைப்பால் மரணம்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இத்தாலி சுற்றுலா பயணி மாரடைப்பால் ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இத்தாலி சுற்றுலா பயணி மாரடைப்பால் ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு அண்மையில் சுற்றுலா வந்த குழுவினருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இவா்களில் 69 வயது நபா், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த அவா், வியாழக்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை தரப்பிலும், ஜெய்ப்பூா் அரசு மருத்துவமனை தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அவரது இறப்புக்கு கரோனா வைரஸ் பாதிப்பு காரணமல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, ஜெய்ப்பூா் எஸ்எம்எஸ் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சுதீா் பண்டாரி கூறுகையில், ‘69 வயதாகும் அந்த இத்தாலி பயணி, எங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த அவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது விருப்பத்தை தெரிவித்தாா். இதையடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அன்றைய தினம் இரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்தாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com