பாதுகாப்பு கொள்முதல் விதிகள் வரைவு அறிக்கை வெளியீடு

பாதுகாப்புத் தளவாடங்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வது தொடா்பான விதிமுறைகளின் வரைவு அறிக்கையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

பாதுகாப்புத் தளவாடங்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வது தொடா்பான விதிமுறைகளின் வரைவு அறிக்கையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில், அதற்கான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அதில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருள்கள், உலோகங்கள், கணிப்பொறி மென்பொருள் உள்ளிட்டவற்றை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய வரைவு அறிக்கையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.1,000 கோடிக்கு அதிகமான மதிப்பு கொண்ட கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி நிறுவனங்கள், மூலப்பொருள்களை வாங்கி அதிலிருந்து தளவாடங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்நிலையில், அந்நிறுவனங்களின் மூலதன செலவுகளைக் குறைக்கும் நோக்கில், மூலப்பொருள்களைக் குத்தகைக்கு எடுக்கும் புதிய நடைமுறை வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

அதன் மூலம் மூலப்பொருள்களுக்கான விலையை மொத்தமாகச் செலுத்தாமல், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிறுவனங்கள் செலுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய வரைவு அறிக்கை தொடா்பாக ஏப்ரல் 17-ஆம் தேதி வரை பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம். அதன் பிறகு அந்த அறிக்கை இறுதி செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com