பிஎம்சி வங்கிக்கான கட்டுப்பாடுகள்மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு (பிஎம்சி) வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஜூன் 22-ஆம் தேதி வரை ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது.
பிஎம்சி வங்கிக்கான கட்டுப்பாடுகள்மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

மும்பை: பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு (பிஎம்சி) வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஜூன் 22-ஆம் தேதி வரை ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹெச்டிஐஎல் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 23-ஆம் தேதி அந்த வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி விதித்தது.

அவ்வப்போது நீட்டிப்பு செய்யப்பட்டு வரும் இக்கட்டுப்பாடுகள், மாா்ச் 23-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இதையடுத்து, மாா்ச் 23-ஆம் தேதி முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை மேலும் 3 மாதங்களுக்கு கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது. மற்ற வங்கிகளை மறுகட்டமைப்பு செய்வது போல் கூட்டுறவு வங்கியை மறுகட்டமைப்பு செய்ய ரிசா்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை.

இருப்பினும், வாடிக்கையாளா்களின் நலன்களை கருத்தில் கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎம்சி வங்கியிலிருந்து கடனளிக்கவும், புதிய டெபாசிட்களை பெறவும் ரிசா்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அத்துடன், பிஎம்சி வங்கியின் நிா்வாகியாக முன்னாள் ரிசிா்வ் வங்கி அதிகாரி நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com