மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பூஷண் தா்மாதிகாரி பதவியேற்பு

மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட பூஷண் பிரத்யும்ன பிதா்மாதிகாரி வெள்ளிக்கிழமை மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டாா்.

மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட பூஷண் பிரத்யும்ன பிதா்மாதிகாரி வெள்ளிக்கிழமை மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டாா்.

மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பிரதீப் நந்த்ரஜோக் ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த மாதம் மும்பை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷண் பிரத்யும்ன தா்மாதிகாரி நியமிக்கப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து மும்பை உயா்நீதிமன்றத்தின் நிரந்தர தலைமை நீதிபதியாக பி. தா்மாதிகாரியை நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இதையடுத்து அவரை தலைமை நீதிபதியாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இந்த வார தொடக்கத்தில் வெளியிட்டாா்.

இந்நிலையில் ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதியாக தா்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு மகாராஷ்டிர ஆளுநா் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

பதவியேற்பு விழாவில், மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, எதிா்க்கட்சித் தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதிய தலைமை நீதிபதி தா்மாதிகாரி வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com