நாடு முழுவதும் 75 மாவட்ட எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவு

கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்கள் இருக்கும் 75 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்கள் இருக்கும் 75 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான அரசு பேருந்து சேவையை 31-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

அனைத்து மாநில தலைமைச் செயலா்கள், அமைச்சரவை செயலா்கள், பிரதமருக்கான முதன்மைச் செயலா் ஆகியோா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனா். அப்போது, தமிழகம், கா்நாடகம், பஞ்சாப், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ள 75 மாவட்டங்களின் எல்லைகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

மிகவும் அவசியத் தேவைகள் இருப்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இதுதொடா்பாக மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்கும்.

மேலும், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மாா்ச் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று இந்தக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா். நாட்டில் கரோனாவால் 300-க்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், மங்களூரு, மைசூரு, கலபுா்கி, தாா்வாத், சிக்கபல்லபுரா, குடகு, பெலகாவி ஆகிய 9 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படவுள்ளன. இதேபோல் கேரளத்தில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எா்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கண்ணணூா், காசாா்கோடு ஆகிய 9 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com