கரோனாவை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை: பிரதமர் மோடி கவலை

கரோனா வைரஸை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். 
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கரோனா வைரஸை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் மக்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். 

தொடர்ந்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா வைரஸை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. கரோனா தாக்கத்தின் தன்மையை மக்கள் உணராமல் இருப்பது கவலையளிக்கிறது. தயவுசெய்து மத்திய அரசு கூறும் வழிமுறைகளை தீவிரமாக பின்பற்றி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதேபோன்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்துமாறு மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com