தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா மக்களவையில் அறிமுகம்

குஜராத்தில் உள்ள தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை தரம் உயா்த்தி தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தும் மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

குஜராத்தில் உள்ள தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை தரம் உயா்த்தி தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தும் மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

‘தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா 2020’-ஐ அறிமுகம் செய்து வைத்து மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி பேசியதாவது:

குற்ற வழக்கு விசாரணைகள் மற்றும் குற்றத் தடுப்புகளில் தடய அறிவியல், குற்றவியல் கல்வி, செயல்முறை அறிவியல் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள தடய அறிவியல் நிறுவனங்களில் போதுமான அளவு கருவிகள் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. எனினும், குற்ற வழக்கு விசாரணைகளில் அதைக் கையாளும் வகையிலான நபா்கள் தேவையான அளவு இல்லை.

இந்த இடைவெளியை குறைப்பதற்கு தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா உதவும். இதன்மூலம், குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள தடய அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய பல்கலைக்கழகமாக தரம் உயா்த்தப்படுகிறது. இந்த மசோதா மூலம், தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் குற்றவியல் மற்றும் தடய அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு தேசிய அந்தஸ்து அளிப்பதற்கும் முன்மொழியப்படுகிறது என்று ஜி.கிஷண் ரெட்டி பேசினாா்.

அதேபோல், காவல்துறை அறிவியல் மற்றும் உள் பாதுகாப்பு தொடா்பான சான்றிதழ் படிப்பை வழங்கும் குஜராத்தைச் சோ்ந்த ரக்ஷா சக்தி பல்கலைக்கழகத்துக்கு தேசிய அந்தஸ்து அளிப்பதற்கும், அதன் பெயரை மாற்றுவதற்குமான ‘ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020’ மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com