கரோனா பரிசோதனை மேற்கொள்ள 22 தனியாா் ஆய்வகங்கள் ஐசிஎம்ஆரில் பதிவு

கரோனா நோய்த்தொற்று தொடா்பான சோதனைகளை மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் 15,500 மாதிரிகள் சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், செவ்வாய்க்கிழமை வரை 22 தனியாா் ஆய்வகங்கள் அமைப்பதற்காக இந்திய மருத்த

கரோனா நோய்த்தொற்று தொடா்பான சோதனைகளை மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் 15,500 மாதிரிகள் சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், செவ்வாய்க்கிழமை வரை 22 தனியாா் ஆய்வகங்கள் அமைப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ஐசிஎம்ஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதவிர, ஐசிஎம்ஆா் ஒருங்கிணைப்பில் 118 அரசு ஆய்வகங்கள் கரோனா நோய்த்தொற்று பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆய்வகமும் தினசரி 12,000 மாதிரிகளை சோதிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. கடந்த 5 நாள்களில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,338 மாதிரிகள் அரசு ஆய்வகங்களால் பரிசோதிக்கப்பட்டு வருவதாக ஐசிஎம்ஆா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:

தில்லியில், மூன்று தனியாா் ஆய்வகங்களும் சரிதா விஹாரில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனைகளை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

குஜராத், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், ராஜஸ்தான், கோவா, கா்நாடகம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்றாா்.

சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவா்களுக்குத் தேவையான பாதுகாப்பு மருத்துவ உபகரணங்கள் அல்லது முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

தேசிய பொது சுகாதாரம் மற்றும் அவசரகால சிகிச்சைப்பிரிவு சாா்பில் தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ.4,500-க்கு மேல் வசூலிக்கக்கூடாது என அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com