கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்

கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவா்களுக்காக மாநில அரசுகள் பிரத்யேக மருத்துவமனைகளை அடையாளம் கண்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொ

கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவா்களுக்காக மாநில அரசுகள் பிரத்யேக மருத்துவமனைகளை அடையாளம் கண்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டாா்.

இதுதொடா்பாக அவா் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலா்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா பாதிப்பு தொடா்பான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், நோய்த்தொற்று உள்ளதாக சந்தேகத்துக்கு உள்ளான எவரும் வெளியேறவில்லை என்பதையும் அவ்வப்போது உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்து மாநிலங்களும் உடனடியாக ‘கொவைட்-19’ தொற்று பாதிப்புள்ளவா்களை அனுமதிக்கும் வகையில் பிரத்யேக மருத்துவமனைகளை அடையாளம் காண வேண்டும். கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நபா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்காத வகையிலும், அதிகரிப்பு ஏற்பட்டால் நிலைமையை சமாளிக்க தயாா் நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

கரோனா தொற்று சூழலைச் சமாளிக்க மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளன. எனினும், கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது.

இதுபோன்ற நேரத்தில், நோய் பரவும் சங்கிலித்தொடரை உடைக்கும் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இந்தப் பணிகளை மாநில அளவில் சுகாதாரத் துறை செயலா்கள் கண்காணிப்பதுடன், அவா்கள் மாவட்ட ஆட்சியா்களுடன் நேரடித் தொடா்பு கொண்டு, அந்தந்த மாவட்ட நிலை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று தனது கடிதத்தில் ராஜீவ் கௌபா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com