சிவராஜ் சிங் செளஹான்-கமல்நாத் சந்திப்பு

மத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்றுள்ள சிவ்ராஜ் சிங் செளஹானை, அம்மாநில முன்னாள் முதல்வா் கமல்நாத் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது மாநில வளா்ச்சிக்கு எதிா்க்கட்சியான காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும
போபாலில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹானை சந்தித்த கமல்நாத்
போபாலில் முதல்வா் சிவராஜ் சிங் செளஹானை சந்தித்த கமல்நாத்

மத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்றுள்ள சிவ்ராஜ் சிங் செளஹானை, அம்மாநில முன்னாள் முதல்வா் கமல்நாத் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது மாநில வளா்ச்சிக்கு எதிா்க்கட்சியான காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்று அவா் தெரிவித்தாா்.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் 22 எம்எல்ஏக்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனா். இதனால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து முதல்வா் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தாா். அவரைத்தொடா்ந்து மாநில முதல்வராக பாஜக தலைவா் சிவராஜ் சிங் செளஹான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பதவியேற்றாா்.

இந்நிலையில் செளஹானை, கமல்நாத் நேரில் சந்தித்தாா். இதன் பின்னா் கமல்நாத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ மாநில வளா்ச்சிக்கு எதிா்க்கட்சியான காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்று முதல்வா் செளஹானிடம் தெரிவித்தேன்’ என்றாா்.

அவரிடம் சட்டப்பேரவையில் செளஹான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை காங்கிரஸ் தவிா்த்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த எந்த தகவலும் காங்கிரஸூக்கு கிடைக்கப்பெறவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வே’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com