வாராணசி மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் மோடி

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமது சொந்த தொகுதியான வாராணசி மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
வாராணசி மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் மோடி


கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமது சொந்த தொகுதியான வாராணசி மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

நாட்டு மக்களிடையே நேற்று இரவு 8 மணிக்கு உரையாற்றி, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்த நிலையில், இன்று வாராணசி மக்களுக்காக உரையாற்றுகிறார்.

அப்போது அவர் பேசியதாவது, இக்கட்டான இந்தச் சூழலில் 21 நாட்கள் வீட்டில் இருந்து கரோனாவை விரட்டுவோம் என்று வாராணசி மக்களிடையே உரையாற்றினார்.

மேலும் அவர் பேசுகையில், உங்களது கடமைகளையும், வழிபாடுகளை மேற்கொள்வதிலும் நீங்கள் ஈடுபட்டிருப்பீர்கள் என்று தெரியும். இருந்தாலும் இன்று உங்களிடம் பேசுவதைக் கேளுங்கள். நமக்குத் தேவையான பலத்தை அளிக்க தாய் ஷைல்புத்ரியை வேண்டிக் கொள்கிறேன். கரோனாவை எதிர்கொள்ள நாட்டு மக்களுக்கு தேவையான பலத்தைத் தருமாறு நான் வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.. புரளிகளை நம்பாதீர்கள். ஏழை, பணக்காரர் என்று கரோனா பார்ப்பதில்லை, யோகா, உடற்பயிற்சி செய்பவர் என எதையும் பார்ப்பதில்லை என்றும் மோடி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com