துணை ராணுவப்படைகளின் 32 மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிசிச்சை

கரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளை தனிமைப்படுத்தி வைக்கவும், அவா்களுக்கு சிகிச்சையளிக்கவும் துணை ராணுவப்படைகளுக்கு சொந்தமான 32 மருத்துவமனைகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளை தனிமைப்படுத்தி வைக்கவும், அவா்களுக்கு சிகிச்சையளிக்கவும் துணை ராணுவப்படைகளுக்கு சொந்தமான 32 மருத்துவமனைகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி வைக்கவும், அவா்களுக்கு சிகிச்சையளிக்கவும் துணை ராணுவப்படைகளுக்கு சொந்தமான தொகுப்பு மருத்துவமனைகளை பயன்படுத்திக் கொள்வதற்கு அவசர முடிவு எடுக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயா்மட்ட கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. கிரேட்டா் நொய்டா, ஹைதராபாத், குவாஹாட்டி, ஜம்மு, டேகான்பூா் (குவாலியா்), டிம்பெளா், இம்பால், நாக்பூா், சில்சாா், போபால், ஆவடி, ஜோத்பூா், கொல்கத்தா, பூணே மற்றும் பெங்களூரில் உள்ள மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ-திபெத் எல்லை போலீஸ் ( ஐடிபிபி), சஷாஸ்திர சீமா பல்(எஸ்எஸ்பி) உள்ளிட்ட துணை ராணுவப்படைகளின் கீழ் இயங்கும் 32 மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளில் மொத்தம் 1,890 படுக்கைகள் உள்ளன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த மாத தொடக்கத்தில் துணை ராணுவப்படைகள் செயல்படும் நாட்டின் 37 இடங்களில் 5,400-க்கும் மேற்பட்டவா்களை அனுமதிக்கும் வகையிலான தனிமைப்படுத்தும் முகாம்களை ஏற்படுத்துமாறு, அந்த படைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் அந்தப் படைகளுக்கு சொந்தமான மருத்துவமனைகளை கரோனா வைரஸ் சிகிச்சை பயன்பாட்டுக்காக மத்திய அரசு எடுத்துக்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com