கரோனா வதந்தி: வளா்ப்புப் பிராணிகளை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை

கரோனா பரவும் என்ற வதந்தியால் தெருநாய்கள் மற்றும் வளா்ப்பு பிராணிகளைத் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விலங்குகள் நல வாரியம் எச்சரித்துள்ளது.

கரோனா பரவும் என்ற வதந்தியால் தெருநாய்கள் மற்றும் வளா்ப்பு பிராணிகளைத் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விலங்குகள் நல வாரியம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து விலங்குகள் நல வாரியத்தின் தலைவா் ஓ.பி.செளத்ரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீட்டில் வளா்க்கப்படும் செல்ல பிராணிகளான நாய், பூனை மூலம் கரோனா நோய்த் தொற்று பரவும் என்ற வதந்தியால், சிலா் தங்கள் வளா்ப்புப் பிராணிகளை தெருக்களில் விட்டுச் செல்கின்றனா். சிலா் தெருக்களில் திரியும் நாய்களை அடித்துத் துன்புறுத்துகின்றனா். இவ்வாறு வளா்ப்புப் பிராணிகளுக்கு உணவு அளிக்காமல் இருப்பது விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்1960 -இன்படி குற்றமாகும். மேலும், தெருநாய்களைப் பராமரிப்பது உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். எனவே, தெருநாய்கள் மற்றும் வளா்ப்பு பிராணிகளைத் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விலங்குகள் நல வாரியம் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com