மும்பை: பதுக்கி வைக்கப்பட்ட4 லட்சம் முகக்கவசங்கள் பறிமுதல்

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியாகும்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியாகும்.

கரோனா வைரஸ் பரவலால் தேசிய அளவில் முகக்கவசங்களுக்கான தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு சிலா் முகக்கவசங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனா். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் உள்ள ஒரு தனியாா் கிடங்கில் ஏராளமான முகக்கவசங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதன்கிழமை அந்த கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. அதில், அங்கு 200 அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் முகக் கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அந்த கிடங்கின் உரிமையாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். எனினும், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

கை சுத்திகரிப்பான், முகக்கவசம் ஆகியவை இப்போது அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த திங்கள்கிழமை மும்பையில் ரூ.15 கோடி மதிப்புள்ள 25 லட்சம் உயர்ரக முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com