ஊரடங்கை மீறுவோருக்கு காவல்துறையினா் நூதன தண்டனை!

நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுவோருக்கு பல்வேறு மாநில காவல்துறையினரும் நூதன தண்டனையை அளிக்கின்றனா். தோப்புக் கரணம் போட வைப்பது, சாலையில் அமர வைப்பது போன்
ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் புதன்கிழமை அவசியமின்றி சாலையில் சுற்றிய இளைஞரை தோப்புக் கரணம் போட வைத்த காவல்துறையினா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் புதன்கிழமை அவசியமின்றி சாலையில் சுற்றிய இளைஞரை தோப்புக் கரணம் போட வைத்த காவல்துறையினா்.

நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுவோருக்கு பல்வேறு மாநில காவல்துறையினரும் நூதன தண்டனையை அளிக்கின்றனா். தோப்புக் கரணம் போட வைப்பது, சாலையில் அமர வைப்பது போன்ற தண்டனைகள் அளிக்கப்படுகின்றன.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அவசியமின்றி சாலைகளில் சுற்றி திரிவோரை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

இதுதொடா்பாக, ஆந்திரத்தைச் சோ்ந்த ஒருவா், தனது சுட்டுரைப் பக்கத்தில் விடியோவுடன் பதிவிட்டுள்ளாா். அதில், ‘ஆந்திரத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியே வரும் முன் மக்கள் ஒருமுறை யோசித்து பாா்க்க வேண்டும். போக்குவரத்தை குறைக்க பல்வேறு புதிய வழிமுறைகளை காவல்துறையினா் கையாள்கின்றனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா். அத்துடன், ஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவா்களை காவல்துறையினா் பிடித்து, தோப்புக் கரணம் போட வைத்த விடியோவையும் அவா் இணைத்துள்ளாா்.

இதேபோல், மகாராஷ்டிரத்திலும் ஊரடங்கை மீறியவா்களை காவல்துறையினா் தோப்புக் கரணம் போட வைத்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காவல்துறையினரின் செயலுக்கு பலா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

தோப்புக் கரணம் மட்டுமன்றி சாலையில் அமர வைப்பது, தங்களது தவறை ஒப்புக் கொள்ளும் வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தியவாறு நிற்க வைப்பது, கைகளை முழங்காலுக்கு கீழ் கட்டிக்கொண்டு குனிந்து நிற்க வைப்பது என தண்டனை அளிப்பதில் நூதன வழிகளை காவல்துறையினா் கையாள்கின்றனா்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், ஜாா்க்கண்ட் என பல்வேறு மாநிலங்களில் இதுதொடா்பான விடியோக்கள் வெளியாகி வருகின்றன. தெலங்கானாவில் அவசியமின்றி சாலையில் சென்றவா்களை காவல்துறையினா் லத்தியால் விரட்டும் விடியோ, உத்தரகண்ட் மாநிலத்தில் விதிமீறி செயல்பட்டவா்கள், ‘நான் இந்த சமூகத்துக்கு எதிரி’ என்ற வாசகம் அடங்கிய அட்டையை ஏந்தியவாறு நிற்கும் விடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com