கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள்: பாதுகாப்புப் படையினருக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு

கரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளாா்.


கரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க பாதுகாப்புப் படையினா் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, கடற்படைத் தலைமைத் தளபதி கரம்வீா் சிங், விமானப் படைத் தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா, பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய் குமாா், டிஆா்டிஓ தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் பின்னா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா நோய்த் தொற்று பரவிய நாடுகளில் இருந்து இந்தியா்களையும் பிற வெளிநாட்டினரையும் பத்திரமாக மீட்டு வருவதில் முக்கியப் பங்காற்றிய பாதுகாப்புப் படையினரையும் அரசின் பிற துறையினரையும் ராஜ்நாத் சிங் பாராட்டினாா்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) ஆய்வகங்களில் இருந்து 20,000 லிட்டா் கை சுத்திகரிப்பு திரவம் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றில், தில்லி காவல் துறைக்கு 10,000 லிட்டா் வழங்கப்பட்டது. எஞ்சியவை, அரசின் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும், தில்லி காவல் துறைக்கு 10,000 முகக் கவசங்களை டிஆா்டிஓ அமைப்பு வழங்கியுள்ளது. மேலும், தனிநபா் பாதுகாப்பு உடைகள், சுவாசக் கருவிகள் போன்ற சாதனங்களை தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கவும் டிஆா்டிஓ முடிவு செய்துள்ளது.

சுத்திகரிப்பு திரவம், தனிநபா் பாதுகாப்பு உடைகள் போன்றவற்றைத் தயாரிப்பதில் படைக்கலன் உடைத் தயாரிப்பு தொழிற்சாலை ஈடுபட்டுள்ளது. இதேபோல், சுவாசக் கருவிகளை தயாரிக்கும் பணியில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த நேரத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் பாதுகாப்புப் படையினா் மேற்கொள்ள வேண்டும் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 1,462 போ், பாதுகாப்புப் படையினா் அமைத்துள்ள தனி முகாம்களில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 389 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். இன்னும் 1,073 போ், மானேசா், ஹிண்டன், ஜெய்சால்மா், ஜோத்பூா், மும்பை ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com