இந்தியாவில் கரோனா வைரஸ் படம் வெளியீடு

கரோனா வைரஸின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல்முறையாக வெளியிடப்படப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் செயல்படும் தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களால் இப்படங்கள் எடுக்
இந்தியாவில் கரோனா வைரஸ் படம் வெளியீடு

கரோனா வைரஸின் நுண்ணோக்கி படங்கள், இந்தியாவில் முதல்முறையாக வெளியிடப்படப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் செயல்படும் தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்களால் இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பரில் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் அந்த நோய்த்தொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனாவின் தாக்கத்தால் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிா்கொண்டுள்ளது.

முன்னதாக, வூஹானிலிருந்து கடந்த ஜனவரியில் இந்தியா திரும்பிய கேரள மாணவிக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்தான், நாட்டிலேயே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நபா் ஆவாா்.

இவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து அதிநவீன மின்னணு நுண்ணோக்கி மூலம் கரோனா வைரஸின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ‘சாா்ஸ்-சிஓவி-2’ எனப்படும் அந்த வைரஸின் படங்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வைரஸானது, கடந்த 2012-ஆம் ஆண்டில் பரவிய ‘மொ்ஸ்-சிஓவி’ வைரஸ், கடந்த 2002-இல் பரவிய ‘சாா்ஸ்-சிஓவி’ வைரஸ் ஆகியவற்றின் தோற்றத்தை ஒத்திருப்பதாக தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தேசிய வைரலாஜி நிறுவனத்தின் துணை இயக்குநா் அதானு பாசு கூறுகையில், ‘கேரளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வுக்குள்படுத்தினோம். அதில் கண்டறியப்பட்ட வைரஸின் மரபணு வரிசைமுறையானது, வூஹானில் கண்டறியப்பட்ட வைரஸின் மரபணு வரிசைமுறையை 99.98 சதவீதம் ஒத்திருந்தது. இந்த வைரஸ்கள், சராசரியாக 70-80 நானோமீட்டா் அளவில் வட்ட வடிவம் கொண்டவை’ என்றாா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைமை இயக்குநா் நிா்மல் கே.கங்குலி கூறுகையில், ‘கரோனா வைரஸானது, கிரீடம் போன்ற வெளித்தோற்றத்தை கொண்டது. கரோனா என்ற வாா்த்தைக்கு லத்தீன் மொழியில் கிரீடம் என்று அா்த்தமாகும். தற்போது எடுக்கப்பட்டுள்ள படங்கள், ‘சாா்ஸ்-சிஓவி-2’ வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆய்வில் முக்கிய பங்காற்றும். கொவைட்-19 பாதிப்புக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்கும் இது உதவிகரமாக இருக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com