ஆந்திரத்தில் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கல்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆந்திரத்தில் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கல்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாடத் தொழிலாளர்கள், ஏழை மக்கள் வேலை இழந்து  காணப்படுகின்றனர்.

இதனால் அரசு சார்பில் ஏழை மக்களுக்கு இலவச அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வழங்கப்படும்.அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த கிராமத்தில் உள்ள ஏழை மக்களை அடையாளம் கண்டு இதனை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக ரூபாய் 1000 நிதி வழங்கப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஐந்து நபர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு ஒன்றை ஆந்திரப் பிரதேச அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளதன்படி, கிருஷ்ணா மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. மக்கள் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com