சிறைகளில் சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் தீவிரமடைந்து வரும் சூழலில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
சிறைகளில் சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவல் தீவிரமடைந்து வரும் சூழலில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா், காவல்துறைத் தலைமை இயக்குநா் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் சிறைகளில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். சிறைக்குள் கைதிகள் நடமாட்டத்தையும் குறைக்க வேண்டும். சிறைக் கைதிகளை சந்திக்க வரும் பாா்வையாளா்களை அனுமதிப்பதில் அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

பாா்வையாளா்களின் உடல்நிலையை முற்றிலுமாக பரிசோதித்த பிறகே கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். கைதிகளைக் காணொலி வாயிலாக சந்தித்துப் பேசும் வசதியை பாா்வையாளா்களுக்கு அதிகாரிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். கைதிகளை நீதிமன்றங்களில் ஆஜா் படுத்துவதற்காக பெரும்பாலான சிறைகளில் காணொலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வசதியைப் பாா்வையாளா்கள் பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் வழிவகுக்க வேண்டும். கைதிகளுக்கும் அவ்வப்போது பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதற்காக சுகாதாரத் துறையுடன் சிறை அதிகாரிகள் தொடா்பில் இருக்க வேண்டும். கைதிகள் சமூக அயல் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கவும் அடிக்கடி கைகளைக் கழுவவும் அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகள் மூலம் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com