அஸ்ஸாமில் 2,506 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஸ்ஸாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தை
அஸ்ஸாமில் 2,506 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

ரங்கியா: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஸ்ஸாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தை ஒட்டிய தலைநகர் குவஹாத்தியில் சுமார் 2,506 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அஸ்ஸாமில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் அம்மாநிலம் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இதுகுறித்து மாவட்ட இணை இயக்குநர் சுகாதார மருத்துவர் என்.எஸ்.திஷ்யா கூறுகையில்,

ரங்கியாவில் உள்ள சுகாதார மையத்தின் கீழ் 381 பேரும், கமலாப்பூரில் 322 பேரும், பிஹ்தியாவில் 122 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கம்ரூப் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 159 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ரங்கியா ரயில்வே பாலி கிளினிக்கில் 20 படுக்கைகள் உள்ளன என்று சுகாதார அதிகாரி கூறியுள்ளார். 

இதற்கிடையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். இங்குள்ள நகராட்சி பகுதியின் அனைத்து வார்டுகளையும் சோதனை நடத்தி வருகின்றனர். 

அந்த நாட்டு உத்தரவின்படி, மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவற்றுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com