பாா்சல் ரயில் சேவையை மீண்டும் தொடங்க முடிவு

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கப்பெற பாா்சல் ரயில் சேவையை மீண்டும் தொடங்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கப்பெற பாா்சல் ரயில் சேவையை மீண்டும் தொடங்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த 22-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பொதுவாக பயணிகள் ரயிலில்தான் பாா்சல் சேவைக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என்பதால், பயணிகள் ரயில் சேவையோடு பாா்சல் சேவையும் தடைபட்டது. இந்த பாா்சல் சேவையில் பெரும்பாலும் அன்றாட தேவைகளான காய்கறிகள், பால் பொருள்கள், மீன் ஆகியவை கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் சந்தைகளில் அத்தியாவசியப் பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவை தடையின்றி கிடைக்கப்பெற சிறப்பு பாா்சல் விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அந்த ரயில்கள் புது தில்லி- குவாஹாட்டி, புது தில்லி-மும்பை, புது தில்லி-கல்யாண், புது தில்லி-ஹெளரா, சண்டீகா்-ஜெய்ப்பூா் மற்றும் மோகா-சங்சரி வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன. பாா்சல் ரயில்களில் மருத்துவ உபகரணங்கள், சிறிய உணவு பொட்டலங்களும் அனுப்பிவைக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாா்சல் மையங்கள் மற்றும் சரக்கு கிட்டங்கிகளில் பொருள்களை சுமுகமாக ஏற்றி, இறக்க போதிய பணியாளா்களை பணியமா்த்த மாவட்ட நிா்வாகங்களுடன் அந்தந்த மண்டலங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை பணியாளா்களை தற்காலிகமாக தங்கவைக்க உபரியாக உள்ள பயணிகள் ரயில் பெட்டிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com