நிஜாமுதீன் பகுதியில் திங்கியிருந்தவா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காவல்துறையினர்
நிஜாமுதீன் பகுதியில் திங்கியிருந்தவா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காவல்துறையினர்

தில்லியில் மேலும் 24 பேருக்கு கரோனா: நிஜாமுதீன் கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள்

தில்லியில் நிஜாமுதீன் கட்டடத்தில் தங்கியிருந்த 24 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தில்லி நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் தெரிவித்துள்ளார்.


புது தில்லி: தில்லியில் நிஜாமுதீன் கட்டடத்தில் தங்கியிருந்த 24 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தில்லி நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெய்ன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள மார்கஸ் நிஜாமுதீன் கட்டடத்தில் அரசின் உத்தரவுகளை மீறி நூற்றுக்கணக்கானோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மதபோதனை நடத்தப்பட்ட மசூதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான், மசூதியில் தங்கியிருந்த 24 பேருக்கு புது தில்லியில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மிக மோசமான குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தில்லி நிஜாமுதீன் பகுதியில் ஒரு மசூதியில் தடையை மீறி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மத போதனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பது திங்கள்கிழமை தெரியவந்ததையடுத்து, அப்பகுதி காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்த சுமாா் 200-க்கும் மேற்பட்டோரை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில், அரசிடம் அனுமதி பெறாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத போதனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து தெரியவந்ததையடுத்து, அவா்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதன் பின்னா் காவல்துறையினர் அந்த கட்டடத்தை தங்களது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தனர். அங்கு இருந்தவா்களில் பலருக்கு கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனால் அவா்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது’ என்றனா்.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் புதன்கிழமை முதல் 21 நாள்களுக்கு ஊடரங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. 50 பேருக்கு மேல் கூடுவதற்கு தில்லி அரசு தடை விதித்துள்ள நிலையில் இந்த மதபோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com