தில்லியின் 11 மாவட்டங்களும் மே 17 வரை சிவப்பு மண்டலத்தின் கீழ் இருக்கும்: கேஜரிவால் அரசு

மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை மே 17-ம் தேதி வரை நீட்டித்துள்ள நிலையில்,
தில்லியின் 11 மாவட்டங்களும் மே 17 வரை சிவப்பு மண்டலத்தின் கீழ் இருக்கும்: கேஜரிவால் அரசு

புது தில்லி: மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை மே 17-ம் தேதி வரை நீட்டித்துள்ள நிலையில், தேசிய தலைநகரின் 11 மாவட்டங்களும் மே 17 வரை சிவப்பு மண்டலத்தின் கீழ் இருக்கும் என்று தில்லி அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், 

தில்லியில் உள்ள 11 மாவட்டங்களிலும் 10-க்கும் மேற்பட்ட கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, அவை அனைத்தும் சிவப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன. சிவப்பு மண்டலத்திற்கு அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட சேவைகள் அனுமதிக்கப்படும், என்று அவர் மேலும் கூறினார்.

மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சிவப்பு, ஆரஞ்சு மற்று பச்சை மண்டலங்களாகப் பிரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தில்லியில் உள்ள 11 மாவட்டங்களில் தென்கிழக்கு, மத்திய, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, மேற்கு, ஷஹ்தாரா, கிழக்கு, புது தில்லி, வடமேற்கு, தென்மேற்கு - கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. 

தென்கிழக்கில் மொத்தம் 1,571 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அம்மாவட்டத்தில் 20 செயலில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.  வடமேற்கு மாவட்டத்தில் மூன்று கட்டுப்பாட்டு மண்டலங்கள் மட்டுமே அறிவித்துள்ளன. 

மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட நிலவரப்படி, மொத்தம் இதுவரை கரோனாவுக்கு 3,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 61 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com