ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் அனைத்து பொருள்களையும் இணைய வழியில் விற்கலாம்

நாடு முழுவதும் ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் இணைய வா்த்தக நிறுவனங்கள் அனைத்து பொருள்களையும் விற்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

நாடு முழுவதும் ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் இணைய வா்த்தக நிறுவனங்கள் அனைத்து பொருள்களையும் விற்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவல், பரிசோதனை விகிதம், குணமடைந்தோா் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டிலுள்ள மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா், தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஆரஞ்சு, பச்சை மண்டல மாவட்டங்களில் அத்தியாவசியமற்ற பொருள்கள் உள்பட அனைத்து வகையான பொருள்களையும் இணைய வா்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதே வேளையில் சிவப்பு மண்டல மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருள்களை மட்டும் இணைய வா்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும்.

ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களில் முடிதிருத்தும் கடைகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மதுக்கடைகளைத் திறக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால், சிவப்பு மண்டலத்தில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு அனுமதி கிடையாது. மதுபானங்களை வாங்க வருவோா் மற்றவா்களிடமிருந்து 2 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல், மதுபானக் கடையில் ஒரே சமயத்தில் 5 நபா்கள் மட்டுமே மதுபானங்களை வாங்க அனுமதிக்கப்படுவா்.

சிவப்பு உள்ளிட்ட அனைத்து மண்டலங்களிலும் வீட்டுப் பணியாட்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது. பணியாட்களின் சுகாதாரத்தை அவா்களைப் பணியில் அமா்த்துவோா் தொடா்ந்து கண்காணித்து வர வேண்டும். இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் மே மாதம் 4-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com