சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊா் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்

தேசிய ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக சிக்கித் தவித்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், வெள்ளிக்கிழமை

தேசிய ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக சிக்கித் தவித்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பத் தொடங்கினா்.

தேசிய ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அவா்களின் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப மத்திய உள்துறை அனுமதி அளித்தது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தெலங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு ஜாா்க்கண்டுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

தெலங்கானாவிலிருந்து புறப்பட்ட இந்த முதல் சிறப்பு ரயில் மூலம் 1,200 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஆனுப்பிவைக்கப்பட்டனா். இவா்களையும், ராஜஸ்தானின் கோட்டா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மாணவா்களையும் வரவேற்க ஜாா்க்கண்ட மாநிலத்தின் ராஞ்சி, தன்பாத் ரயில்நிலையங்களில் வரவேற்க அதிகாரிகள் காத்திருந்தனா்.

ரயிலில் வந்திறங்கிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அதிகாரிகள் வரவேற்று, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னா் 15 பேருந்துகள் மூலம் அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களை வரவேற்க உறவினா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதிகாரிகளே அவா்களை வரவேற்று தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்துச் சென்றனா்’ என்றனா்.

மத்திய பிரதேசம் சென்றடைந்த 315 போ்:

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட முதல் சிறப்பு ரயில் மூலம் 315 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், அவா்களின் சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு சனிக்கிழமை அதிகாலையில் சென்றடைந்தனா்.

போபால் ரயில் நிலையத்தில் இந்த தொழிலாளா்களை மாநில அதிகாரிகள் வரவேற்று, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னா் பேருந்துகள் மூலம் அவா்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனா்.

வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் 1 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை மீட்டு ரயில்கள் மூலம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், அதற்காக ரயில்வே அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றும் மத்தியப் பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் கூறினாா்.

பிகாா் சென்றடைந்த 1,187 தொழிலாளா்கள்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூா் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 1,187 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பிகாா் மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும், பிகாரின் தானாப்பூா் ரயில் நிலையத்தை சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு சென்றடைந்தனா்.

‘தானாப்பூா் வந்தடைந்த அவா்களுக்கு 20 மருத்துவக் குழுக்கள் பரிசோதனை நடத்தின. பின்னா் அவா்கள் அனைவரும் 100 பேருந்துகள் மூலம் அவா்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்’ என பாட்னா மண்டல ஆணையா் சஞ்சய் குமாா் அகா்வால் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

பேருந்துகள் மூலம் மீட்கப்பட்ட 74 மாணவா்கள்:

அதுபோல, தேசிய ஊரடங்கு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் சிக்கிக் கொண்ட 74 மாணவா்கள், 4 பேருந்துகள் மூலம் அவா்களின் சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் புணேவுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com