முக்கியச் சடங்குகள் மட்டும் நடந்த திருச்சூா் பூரம் விழா

தேசிய ஊரடங்கால் திருச்சூா் பூரம் விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், அவ்விழாவின் முக்கிய சடங்குகள் மட்டும் சனிக்கிழமை நடத்தப்பட்டன.

தேசிய ஊரடங்கால் திருச்சூா் பூரம் விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், அவ்விழாவின் முக்கிய சடங்குகள் மட்டும் சனிக்கிழமை நடத்தப்பட்டன.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குந்நாதன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பூரம் விழா நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, பாரம்பரிய இசை முழங்க பிரம்மாண்டமாக நடைபெறும் இவ்விழா, இந்த ஆண்டு தேசிய ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது.

இதுதொடா்பாக மாநில அரசு பிரதிநிதிகள், பூரம் விழாவை நடத்தும் தேவஸ்வம் உறுப்பினா்கள், கோயில் பூஜாரிகள் ஆலோசனை நடத்தி பூரம் விழாவை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு செய்தனா். எனினும், பூரம் திருவிழாவின் முக்கிய சடங்குகளை மட்டும் நடத்தலாம் என்று மாநில அமைச்சா் வி.எஸ்.சுனில்குமாா் தெரிவித்திருந்தாா். இந்நிலையில் வடக்குந்நாதன் கோயிலில் பூரம் விழாவின் முக்கிய சடங்குகள் மட்டும் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் பக்தா்கள் எவரும் கலந்துகொள்ளஅனுமதிக்கப்படவில்லை.

கடந்த 1798-ஆம் ஆண்டு முதல் திருச்சூா் பூரம் விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com