இந்தியாவில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது: நச்சுயிர் வல்லுநர்

இந்தியாவில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறத் தொடங்கிவிட்டதாக நுச்சுயிர் வல்லுநர் டாக்டர் டி. ஜாகோப் ஜான் கூறியுள்ளார்.
இந்தியாவில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது: நச்சுயிர் வல்லுநர்


இந்தியாவில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறத் தொடங்கிவிட்டதாக நுச்சுயிர் வல்லுநர் டாக்டர் டி. ஜாகோப் ஜான் கூறியுள்ளார்.

வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் நச்சுயிரியல் துறை பேராசிரியருமான ஜாகோப் இது பற்றி கூறுகையில், இந்தியாவில் கரோனா தொற்று சமூகப் பரவலாகிவிட்டதை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புக் கொண்டு, உடனடியாகத் தொற்றுப் பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவரது பதில்களும்.

ஒடிசாவில் ஏராளமான தொழிலாளர்கள், வெளி மாநிலத்தில் இருந்து திரும்பிய பல நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்குமே எந்த அறிகுறியும் இல்லை. இன்னமும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்துதல் காலத்தை 14 ஆகவே வைத்திருப்பது சரியா?
புலம்பெயர் தொழிலாளர்கள் எந்த மாநிலத்தில் இருந்து வந்தார்களோ அங்குதான் அவர்களுக்கு இந்த தொற்று பரவியிருக்கும் என்று கூற முடியாது. அவர்கள் பயணத்தைத் தொடங்கிய பிறகுக் கூட, அவர்களில் யாருக்காவது ஒருவருக்கு தொற்று பாதித்திருந்தால் கூட, அவர்களுடன் பயணித்த அனைவருக்கும் இந்த தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுதான் சமூகத் தொற்று.

பொதுவாக ஒரு தொற்று பாதித்து, அதன் அறிகுறிகள் தெரியவர பெரும்பாலும் 3 முதல் 14 நாள்கள் ஆகிறது.  சிலருக்கு மூன்று வாரங்களுக்கும் மேல் தான் அறிகுறி தெரியும். சிலருக்கு இன்னும் சில அதிக நாள்கள் கூட ஆகிறது.

இந்தியாவில் சமூகத் தொற்று ஏற்பட்டுவிட்டதா என்பது குறித்து ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய அரசு ஆய்வு நடத்த உள்ளது, உங்கள் பார்வை எப்படி உள்ளது?

எனது பார்வையில், தமிழகத்தில் மார்ச் 18ம் தேதி கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போதே சமூகத் தொற்று ஆரம்பித்துவிட்டது. ஏன் என்றால், கரோனா பாதித்த ஒருவருடன் தொடர்பில் இல்லாத நபர், தில்லியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் வந்த போது கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வந்த பிறகு அவருக்கு அறிகுறி தென்பட்டுள்ளது. இதுபோல மார்ச் 19ல், 52 வயது நபர் கொல்கத்தாவில் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் எந்த வெளிநாட்டுக்கும் சென்று வராதவர். இதுவும் ஒரு சமூகத் தொற்றின் உதாரணம்தான்.

இதுபோல மேலும் பல நோயாளிகள் இருக்கிறார்கள். மார்ச் மாதத் துவக்கத்திலேயே இந்தியாவில் சமூகத் தொற்று ஆரம்பித்துவிட்டது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் சமூகத் தொற்றை ஒப்புக் கொண்டு, அதனைத் தடுக்க நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும்.

மூன்று மாதங்களில் 50 ஆயிரத்தை தாண்டிவிட்டோம். உங்களிடம் ஏதேனும் திட்டம் இருக்கிறதா? பாதிப்பு மற்றும் மரணம் தொடர்பாக ஏதேனும் மதிப்பீடு?

ஒட்டுமொத்த பாதிப்பில் நாம் கண்டுபிடித்திருப்பது ஒரு பகுதிதான். நமக்கு ஒட்டுமொத்த கணக்கும் தெரியாது அல்லது சிறப்பு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஒட்டுமொத்த பாதிப்பையும் தெரிந்துகொள்ள முடியாது. நாம் பரிசோதனை செய்யும் நபர்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே தெரியும். அது கிட்டத்தட்ட வெறும் 10 சதவீதம் தான். பரிசோதனையை விரிவுபடுத்தினால் பாதிப்பும் அதிகம் தெரியவரும். 

அதாவது, நாம் கண்டுபிடித்திருப்பது வெறும் 10 சதவீதம் என்றால் ஒட்டுமொத்த பாதிப்பு 50 லட்சமாக இருக்கும், இல்லை அது வெறும் 5 சதவீதம் என்றால், ஒட்டுமொத்த பாதிப்பு  10 லட்சமாக இருக்கும், ஒருவேளை நாம் கண்டுபிடித்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் என்றால், மொத்த பாதிப்பு 2.5 லட்சமாக இருக்கலாம். ஆனால், நாம் கண்டுபிடித்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 5ல் இருந்து 30% ஆக இருக்கலாம் என்பது எனது கணிப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com