சிறப்பு ரயில்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்தது இந்திய ரயில்வே

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும்  சிறப்பு ரயில்களுக்கான விதிமுறைகளில் இந்திய ரயில்வே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு ரயில்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்தது இந்திய ரயில்வே

புது தில்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும்  சிறப்பு ரயில்களுக்கான விதிமுறைகளில் இந்திய ரயில்வே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, புறப்படும் மாநிலத்தில் இருந்து சென்று சேரும் மாநிலம் வரை இடைநிற்காமல் செல்லும் வகையில் இருந்த சிறப்பு ரயில்கள் இனி அதிகபட்சமாக 3 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதுவரை சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் நடு படுக்கை வசதி பயன்படுத்தாமல் இருந்த நிலையில், இனி, மொத்த படுக்கை வசதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று விதிமுறைகளில் தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளன.

ரயில்வே இதுவரை இயக்கிய 428 சிறப்பு ரயில்களின் மூலமாக 4.5 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்பியுள்ளனா் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பாதிப்பைத் தொடா்ந்து அறிவிக்கப்பட்ட தேசிய பொது முடக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப வசதியாக மே 1-ஆம் தேதி முதல் 428 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் மூலம் 4.5 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பயணித்துள்ளனா். 

இந்த சிறப்பு ரயில்களில் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் 72 இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியில் 54 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். அனைத்துப் பெட்டிகளிலும் நடு படுக்கை வசதியை பயன்படுத்த இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

இந்த சிறப்பு ரயில் சேவைக்கான செலவு குறித்து ரயில்வே இன்னும் அறிவிக்காத நிலையில், ஒரு சிறப்பு ரயில் இயக்கத்துக்கு மட்டும் ரூ. 80 லட்சம் வரை செலவு ஆவதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களை மீட்பதற்காக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு 85 சதவீதமும், மாநில அரசுகள் 15 சதவீதமும் ஏற்கும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com