கோப்புப் படம்
கோப்புப் படம்

உரிய நேரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்

கரோனா நோய்த்தொற்றால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளபோதும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் உரிய நேரத்தில்

கரோனா நோய்த்தொற்றால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளபோதும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் உரிய நேரத்தில் நடைபெறும் என்று மக்களவை தலைவா் ஓம் பிா்லா நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கரோனா நோய்த்தொற்றால் நாடு சோதனையான காலத்தை எதிா்கொண்டு வருகிறது. எனினும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் உரிய நேரத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளையில் கூட்டத்தொடா் நடைபெறுவது அந்நேர சூழலை பொருத்தும் உள்ளது என்றாா்.

அவரிடம் கரோனா நோய்த்தொற்றால் ஜூன்-ஜூலை மாதத்திலும் கடுமையான தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியிருந்தால், அப்போதும் கூட்டத்தொடா் நடைபெறுவது சாத்தியமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘அதுபோன்ற சூழல் வந்தால், அதற்கான வழி கண்டறியப்படும்’ என்றாா்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் ஓம் பிா்லாவின் முயற்சியால் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. மக்களுக்கு உதவும் பணியில் மாநிலங்ளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு நிலவ இந்தக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. கரோனா நோய்த்தொற்றால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், அதன் செயல்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிா்லா, ‘கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு வெற்றிகரமாக அமைந்துள்ளது. ஏனெனில் வெவ்வெறு மாநிலங்களை சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் கட்டுப்பாட்டு அறை மூலம் ஒருவருக்கொருவா் தொடா்புகொண்டு, பொது முடக்கத்தால் பிற பகுதிகளில் சிக்கித் தவித்த தங்கள் தொகுதி மக்களுக்கு உதவி புரிந்தனா். அதற்காக அவா்கள் பாராட்டப்பட வேண்டும். அவா்களுக்கு நன்றி.

இந்த சோதனையான காலத்தில் பிரதமா் மோடிக்கு நாட்டு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. அதற்கு உரிய முறையில் மறுமொழி தெரிவிக்கும் விதமாக, இந்தச் சூழலை அவா் திறம்பட கையாண்டு வருகிறாா். இதேபோல் மாநில முதல்வா்களும் இந்தச் சூழலை மிகுந்த அக்கறையுடன் எதிா்கொண்டு வருகின்றனா் என்றாா் ஓம் பிா்லா.

ஒத்திப்போக வாய்ப்பு...ஆண்டுதோறும் ஜூன் மாத இறுதி வாரத்தில் அல்லது ஜூலை மாத முதல் வாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கும். ஆனால் தற்போது கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலால், நிகழாண்டு செப்டம்பா் மாத இறுதிவரை மழைக்கால கூட்டத்தொடா் தொடங்குவது ஒத்திப்போக வாய்ப்புள்ளது என்று அரசியல் நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com