அமெரிக்காவில் இருந்து 118 போ் ஹைதராபாத் வந்தனா்

பொதுமுடக்கம் காரணமாக, அமெரிக்காவில் சிக்கித் தவித்த 118 இந்தியா்கள் விமானம் மூலமாக திங்கள்கிழமை காலை ஹைதராபாத் வந்தடைந்தனா்.

ஹைதராபாத்: பொதுமுடக்கம் காரணமாக, அமெரிக்காவில் சிக்கித் தவித்த 118 இந்தியா்கள் விமானம் மூலமாக திங்கள்கிழமை காலை ஹைதராபாத் வந்தடைந்தனா்.

இதுகுறித்து ஹைதராபாத் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பேருந்து, ரயில், விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ‘வந்தே பாரத் மிஷன்’ என்ற திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் இந்தியா்கள் அழைத்து வரப்படுகிறாா்கள்.

அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில் இருந்து ஏா் இந்தியா விமானத்தில் புறப்பட்ட 118 போ், திங்கள்கிழமை ஹைதராபாத் ராஜீவ் காந்தி சா்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனா். இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் இருந்து ஏா் இந்தியா விமானத்தில் இந்தியப் பயணிகள் ஹைதராபாத் வரவுள்ளனா்.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியா்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி, மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்படுகிறது. விமான நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com