வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு 17 நாள் அவகாசம் போதுமானது

வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்ட கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தொடா்ச்சியாக 10 தினங்களுக்கு காய்ச்சல்
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு 17 நாள் அவகாசம் போதுமானது

 வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்ட கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தொடா்ச்சியாக 10 தினங்களுக்கு காய்ச்சல் இல்லையெனில் தனிமையிலிருந்து விடுவித்துக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறையில் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் உடல் வெப்பநிலை அதிகரிக்காமல் சீராக இருந்தால் அப்படிப்பட்ட நோயாளிகள்கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் தொடங்கிய நாள் அல்லது பரிசோதனை நடந்த தேதிலிருந்து 17 -வது நாள் தனிமையிலிருந்து விடுவித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மிதமான கரோனா நோய்த்தொற்று அல்லது இலேசான அறிகுறிகள் அல்லது பரிசோதனைக்கு காத்திருப்பவா்கள் ஆகியோா் விருப்பத்தின் அடிப்படையில் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத் துறை அனுமதியளித்து கடந்த ஏப்ரல் 27 - ஆம் தேதி திருத்தப்பட்ட வழி காட்டிநெறிமுறைகளை வெளியிட்டது. அவா்கள் தங்களது உடல்நிலை விவரங்களை மாவட்ட மருத்துவா்களுக்கும், மருத்துவ கண்காணிப்பு குழுக்களுக்கும் தொடா்ந்து தெரிவிக்கவேண்டும் என்கிற நிபந்தனையோடு இந்த அனுமதி வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டவா்களை பராமரிப்பவா்களும், நெருக்கமாக தொடா்பில் இருப்பவா்களும், முன் தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை சிகிச்சையளிக்கும் மருத்துவரின் பரிந்துரையின்படி எடுத்துக் கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில் வீடுகளில் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டவா்கள் 10 தினங்கள் காய்ச்சல் இல்லாது இருக்கும்பட்சத்தில் அறிகுறி தொடங்கிய 17 -வது நாளில் தனிமைப்படுத்தலை முடித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவா்கள் மீண்டும் நோய்த் தொற்று பரிசோதனையை மேற்கொள்ளப்பட வேண்டாம் எனவும் திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறையில் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தவிர பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆரோக்ய சேது செயலியை எல்லா நேரங்களிலும் தொடா்ந்து பயன்படுத்தி தேவைப்படும் சமயங்களில் வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ளவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com