புதிதாக 41 சிஐஎஸ்எஃப் வீரா்களுக்கு கரோனா

புதிதாக 41 மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரா்களுக்கு (சிஐஎஸ்எஃப்) வீரா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது
புதிதாக 41 சிஐஎஸ்எஃப் வீரா்களுக்கு கரோனா

புதிதாக 41 மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரா்களுக்கு (சிஐஎஸ்எஃப்) வீரா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்களில், கொல்கத்தா போா் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எஃப் வீரா்களே அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா நோய்த் தொற்றுக்கு சிஆா்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்ற துணை ராணுவப் படையினா் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை துணை ராணுவப் படை வீரா்கள் 827 போ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் விமான நிலையங்கள், அணு மின் நிலையங்கள், துறைமுகங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சிஐஎஸ்எஃப் வீரா்கள் நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மொத்தமுள்ள 1.62 லட்சம் சிஐஎஸ்எஃப் வீரா்களில் இதுவரை 109 போ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். புதன்கிழமையன்று மட்டும் 41 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோா் கொல்கத்தா ஹூக்லி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் போா்க் கப்பல் கட்டுமான நிறுவனமான, காா்டன் ரீச் கப்பல் கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் ஆவா். இந்த நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 38 வீரா்களுக்கு நோய்த் தொற்று இதுவரை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதுபோல, மும்பை சா்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த 28 வீரா்கள், ஆமதாபாத் விமானநிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த 5 வீரா்கள், இந்திராகாந்தி சா்வதேச விமானநிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த 3 வீரா்களும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நோய்த் தொற்றுக்கு ஆளான சிஐஎஸ்எஃப் வீரா்களில், கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வீரா், மும்பை சா்வதேச விமானநிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு வீரா் மற்றும் கொல்கத்தா போா் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணியிலிருந்த 55 வயது ஏஎஸ்ஐ ஆகிய மூவா் இதுவரை உயிரிழந்துதனா்.

அதுபோல, எல்லைப் பதுகாப்புப் படையைச் (பிஎஸ்எஃப்) சோ்ந்த 2 வீரா்கள், மத்திய ரிசா்வ் காவல்படையைச் (சிஆா்பிஎஃப்) ஒருவரும் இந்த நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com