சமூக பரவலாகிவிட்டதா கரோனா?ஆய்வு நடத்த ஐசிஎம்ஆா் முடிவு

கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாகிவிட்டதா என்பது தொடா்பாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வு

கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாகிவிட்டதா என்பது தொடா்பாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வு நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) உள்ளிட்ட அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள், சில யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றைச் சோ்ந்த 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது. மொத்தம் 24,000 போ் கரோனா சோதனை நடத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் அந்தப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதா என்பது தொடா்பாக அறிந்து கொள்ளப்படும்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், ஐசிஎம்ஆா், தேசிய நோய்த் தடுப்பு மையம், தேசிய தொற்றுநோய் தடுப்பு அமைப்பு, தேசிய காசநோய் தடுப்பு அமைப்பு ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்துகின்றன. வீட்டுக்கு ஒருவா் என்ற அடிப்படையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com