55 நாள்களாக தில்லி விமான நிலையத்தில் தங்கியிருந்த ஜெர்மன் நபர்: ஒரு குற்றவாளியின் கதை

ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்குமிடம் இல்லாத ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் கடந்த 55 நாட்களாக புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான
கோப்புப் படம்
கோப்புப் படம்


ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்குமிடம் இல்லாத ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் கடந்த 55 நாட்களாக புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலேயே தங்கியிருந்த நிலையில் நேற்று மாலை விமானம் மூலம் ஆம்ஸ்டர்டாம் புறப்பட்டுச் சென்றார்.

40 வயதாகும் எட்கார்ட் ஸியாபெட், ஜெர்மனியில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இவர் வியட்நாமில் இருந்து மார்ச் 18ம் தேதி புது தில்லி வந்து சேர்ந்தார். இவர் இஸ்தான்புல் செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அன்றைய தினமே துருக்கியில் இருந்து விமானம் வந்து செல்ல மத்திய அரசு தடை விதித்தது. 4 நாள்கள் கழித்து அனைத்து சர்வதேச விமானங்களையும் இந்தியா ரத்து செய்தது.

அவர் மீதான குற்றப் பின்னணி காரணமாக இந்தியாவிலும் அவருக்கு விசா மறுக்கப்பட்டது. இதனால் கடந்த 55 நாட்கள் அவர் விமான நிலையத்திலேயே தங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். கடைசியாக மே 12ம் தேதி ஆம்ஸ்டர்டாம் செல்லும் விமானம் மூலம் அவர் தில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

மார்ச் 18-ம் தேதி முதல் தனது உடைமைகளுடன் விமான நிலையத்திலேயே இருந்த ஸியாபெட், பெரும்பாலும் நாளிதழ்கள் புத்தகங்களைப் படித்துக் கொண்டும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செல்லிடப்பேசி வாயிலாக பேசிக் கொண்டும், விமான நிலையத்தில் இயங்கிய உணவகங்களில் இருந்து உணவுகளை வாங்கி சாப்பிட்டும் இருந்துள்ளார். அவ்வப்போது விமான நிலைய தூய்மைப் பணியாளர்களுடன் பேசிக் கொண்டு, அங்கிருக்கும் கழிவறைகளையே பயன்படுத்திக் கொண்டு கடந்த 55 நாட்களை அவர் கழித்துள்ளார்.

அவருக்கு இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொடுக்க விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும், அவரது குற்றப்பின்னணியால் பலனளிக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com