புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச உணவுப் பொருள்கள்: நிர்மலா சீதாராமன்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச உணவுப் பொருள்கள்: நிர்மலா சீதாராமன்


புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட அறிவிப்பில்:

பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு-தானிய உதவி தேவைப்படுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு நபருக்கு 5 கிலோ தானியம், ஒரு குடும்பத்துக்கு 1 கிலோ பருப்பு என 2 மாதங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலம், 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக 2 மாதங்களுக்கு ரூ. 3,500 கோடி செலவிடப்படும். இந்த மொத்த தொகையையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். இதைச் செயல்படுத்துவதும், புலம்பெயர் தொழிலாளர்களைக் கண்டறிவதும், முழுமையாக விநியோகிக்கப்படுவதும் மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

இந்த அறிவிப்பு பற்றி நிர்மலா சீதாராமன் மேலும் விளக்கமளிக்கையில்,

அடுத்த 2 மாதங்களுக்கு அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், இலவசமாக உணவுப் பொருள்கள் வழங்கப்படும். கார்டு இல்லாதவர்களுக்கு ஒரு மாதத்துக்கு நபருக்கு 5 கிலோ கோதுமை/அரிசி மற்றும் குடும்பத்துக்கு 1 கிலோ பருப்பு என 2 மாதங்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ. 3,500 கோடி செலவிடப்படவுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com