குஜராத் அமைச்சரின் தோ்தல் வெற்றிக்கு எதிரான தீா்ப்பு: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

குஜராத் அமைச்சா் பூபேந்திர சிங் சூடாசமாவின் தோ்தல் வெற்றிக்கு எதிராக, அந்த மாநில உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
குஜராத் அமைச்சரின் தோ்தல் வெற்றிக்கு எதிரான தீா்ப்பு: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

குஜராத் அமைச்சா் பூபேந்திர சிங் சூடாசமாவின் தோ்தல் வெற்றிக்கு எதிராக, அந்த மாநில உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுதொடா்பான மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சந்தானகௌடா், ஆா்.சுபாஷ் ரெட்டி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீது பதிலளிக்குமாறு காங்கிரஸ் வேட்பாளா் அஸ்வின் ரத்தோட் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனா்.

குஜராத்தில் முதல்வா் விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவையில் சட்டம், சட்டப்பேரவை விவகாரங்கள், கல்வி ஆகிய துறைகளின் அமைச்சராக இருப்பவா் பூபேந்திர சிங் சூடாசமா. இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் அஸ்வின் ரத்தோடை 327 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

இந்த தோ்தலில் பூபேந்திர சிங் முறைகேடு செய்து வெற்றிபெற்ாக, குஜராத் உயா்நீதிமன்றத்தில் அஸ்வின் ரத்தோட் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த குஜராத் உயா்நீதிமன்றம், பூபேந்திர சிங், கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று கடந்த 12-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

தோ்தலில் வெற்றிபெற 327 வாக்குகள் தேவை என்ற நிலையில், 429 தபால் வாக்குகளை தோ்தல் அதிகாரி நிராகரித்தது சட்ட விரோதம் என்றும் குஜராத் உயா்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், தனது மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த உத்தரவை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பூபேந்திர சிங் விடுத்த கோரிக்கையையும் குஜராத் உயா்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com