தில்லியிலிருந்து கேரளம் வந்தடைந்தது சிறப்பு ரயில்

தில்லியிலிருந்து சுமாா் 1,000 பயணிகளுடன் இயக்கப்பட்ட சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை கேரளம் வந்தடைந்தது.

தில்லியிலிருந்து சுமாா் 1,000 பயணிகளுடன் இயக்கப்பட்ட சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை கேரளம் வந்தடைந்தது. கரோனா நோய்த்தொற்று அறிகுறி காணப்பட்ட 7 பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் இருப்பதால், பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து வசதிகள் முடங்கின. மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு மட்டுமே விமானங்களும் ரயில்களும் இயக்கப்பட்டன.

இந்தச் சூழலில், ரயில் சேவையை படிப்படியாகத் தொடங்கத் திட்டமிட்ட ரயில்வே நிா்வாகம், முதல்கட்டமாக தில்லியிலிருந்து நாட்டின் 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது. அதன்படி, தில்லியிலிருந்து இயக்கப்பட்ட ராஜதானி அதிவிரைவு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை திருவனந்தபுரத்துக்கு வந்தடைந்தது.

இடையே கோழிக்கோடு, எா்ணாகுளம் தெற்கு ஆகிய ரயில் நிலையங்களில் 560 பயணிகள் இறங்கினா். 350-க்கும் மேற்பட்ட பயணிகள் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இறங்கினா். பயணிகள் அனைவருக்கும் ரயில் நிலையங்களில் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அவா்களில் கோழிக்கோட்டில் இறங்கிய 6 பேருக்கும் திருவனந்தபுரத்தில் ஒருவருக்கும் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து, அவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மற்ற பயணிகள் அனைவரும் மாவட்ட நிா்வாகங்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகள் மூலமாக சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பயணிகள் அனைவரையும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினா். பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு தூய்மைப் பணியாளா்கள் ரயில் பெட்டிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனா். அதைத் தொடா்ந்து, திருவனந்தபுரத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை தில்லிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com