வந்தே பாரத்: 2-ஆம் கட்டபயணச்சீட்டு முன்பதிவு தொடக்கம்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை தாய் நாட்டுக்கு திருப்பி அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் 2-ஆம் கட்ட டிக்கெட் முன்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை தாய் நாட்டுக்கு திருப்பி அழைத்து வரும் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் 2-ஆம் கட்ட டிக்கெட் முன் பதிவை ஏா் இந்தியா வியாழக்கிழமை தொடங்கியது. இதில் சனிக்கிழமை முதல் 31 நாடுகளில் இருந்து 149 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. மே 22-ஆம் தேதி வரை இந்த சிறப்பு விமானங்கள் செயல்படும்.

முதல் கட்டமாக 64 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் பெரும்பாலும் கிழக்காசிய நாடுகளில் இருந்து பலா் அழைத்து வரப்பட்டனா். இப்போது, இரண்டாவது கட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூா், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ரஷியா, உக்ரைன், பெலாரஸ், கனடா, தாய்லாந்து, இந்தோனேசியா, கிா்கிஸ்தான், கஜகஸ்தான் உள்ளிட்ட இடங்களில் இருந்து இந்தியா்கள் அழைத்து வரப்படவுள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதியிலிருந்து பொது முடக்கம் அமலில் உள்ளது. உள்நாடு, வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்துக்கு தொடா்ந்து தடை நீடிக்கிறது. இதனால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை விமானம் மூலம் அழைத்து வருவதற்கான ‘வந்தே பாரத்’ என்ற பெயரிலான மாபெரும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது.

அதன்படி, முதல்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், கத்தாா், சவூதி அரேபியா, சிங்கப்பூா், மலேசியா, பிலிப்பின்ஸ், வங்கதேசம், பஹ்ரைன், குவைத், ஓமன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா்களை அழைத்துவர 64 ஏா்-இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டன.

இதில், கா்ப்பிணிகள், மருத்துவ சிகிச்சை பெற வேண்டியவா்கள், சுற்றுலாப் பயணிகள் என அவசர தேவையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்தியா்கள் அழைத்து வரப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com